உலகையே உலுக்கி வரும் பனாமா ஆவணங்கள் (Panama Papers)என்றால் என்ன ?
பனாமா ஆவணங்கள் (Panama Papers) என்பது பனாமாவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேக்கா என்ற நிறுவனத்திலிருந்து கசிய வைக்கப்பட்ட 1.5 மில்லியன் இரகசிய ஆவணங்களைக் குறிக்கும்.
இந்த ஆவணங்களை வாசிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் கசிந்து வைத்து பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கசிவின் தாக்கங்கள்
ஐசுலாந்து பிரதமரின் மனைவி வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததுடன் தங்கள் நாட்டின் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய வங்கிகளுடன் தொடர்புபடுத்தி கசிந்த பனாமா ஆவணங்கள் செய்தியால் பதவி விலகினார்.
சிலியின் ஊழல் தடுப்பு அமைப்பின் தலைவர் கான்சாலசு மேலேவ்வு அவரின் பெயர் பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுருப்பதால் பதவி விலகினார்.
பாக்கித்தான் அதிபர் நவாசு செரிப் தன் மகன்கள் உள்ளிட்ட குடும்பம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ள தொடர்பை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
பெரு நிறுவனங்கள் செய்யும் வரி ஏய்ப்பு குறித்த விசாரணைக்கு உதவாத நாடுகளின் பட்டியலை பிரான்சு பனாமாவுக்கு அனுப்பியுள்ளது.
கசிந்த ஆவணங்களை கொண்டு ஐக்கிய அமெரிக்க நீதி துறை அமைச்சகம் சில நிறுவனங்கள் மீது ஐக்கிய அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு போட சாட்சியங்களை ஆராய்கிறது.
பனாமா அதிபர் தன்னுடைய அரசு முறைகேடான நிதி பரிமாற்றங்களுக்கு எதிராக துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் எந்த நாடு விசாரணை நடத்தினாலும் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கிகள்
எச் எசு பி சி, இசுக்காட்லந்து ராயல் வங்கி, கிரெடிட் சூசி போன்ற பன்னாட்டு வங்கிகளுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இவ்வங்கிகள் அதிகாரிகளால் எளிதில் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கு முடியாதபடி சிக்கலான முறையை ஏற்படுத்தி கொடுத்தன என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை இவ்வங்கிகள் மறுத்துள்ளன.

Reviewed by NEWMANNAR
on
April 07, 2016
Rating:

No comments:
Post a Comment