அண்மைய செய்திகள்

recent
-

முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

முத்தையன்கட்டு நன்னீர் மீன்பிடி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு ஜீவநகர் குளத்தடியில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சால், நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செலவிடப்பட்ட தொகை 2.5 மில்லியன் ரூபாவாகும்.

பொதுநோக்கு மண்டபத்தை, வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களால் இன்று காலை 11.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரனாதன், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் திரு.ஜெகானந்தன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி திரு.என்.சலீவன், முத்துஐயன்கட்டு மீனவ அமைப்பின் தலைவர் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், முத்துஐயன்கட்டு குளத்தையொட்டிய நன்னீர் மீன்பிடி சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வுக்கு அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்கள் தலைமை தாங்கினார்.​


முத்தையன்கட்டு நன்னீர் மீனவர் பொதுநோக்கு மண்டபம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு Reviewed by NEWMANNAR on April 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.