அண்மைய செய்திகள்

recent
-

நான் முதல்வரானால்... இது கற்பனைக் கட்டுரை அல்ல, சீமானின் பொதுக்கூட்ட பேச்சு!

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார்.

கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது, "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம்.

பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள் மக்களுக்கு என்ன பிரச்னை என்பதே தெரியாமல்தான் ஆட்சி செய்து வந்தார்களா? கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஸ்டாலின். நாமும், 'உங்களுக்கு கடந்த காலங்களில் வாக்களித்து ஆட்சிக்கு வர வைத்த எங்களின் கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக்கொளுங்கள்' என கேட்டுக்கொள்ளலாம்.

புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அத்தியாவசிய உணவு தேவையை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

ஜெயலலிதா காலில் விழுந்தால் பரவாயில்லை. கார் டயரில் விழுவதை என்னவென சொல்வது? ஹெலிகாப்டரை கும்பிட்டாலும் பரவாயில்லை. ஹெலிகாப்டர் நிழலை பார்த்து கும்பிடுகிறான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார் கலைஞர். விவசாயியை கடனாளியாக்கியது யார் என்றால் பதிலில்லை. கல்வி கடன் ரத்து செய்வோம் என்கிறார். கடன் வாங்கி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார் என்றால் அதற்கும் பதிலில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச்சொல்வார் ? ... இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம், மது மூன்றும்தான் பிரச்னையாக உள்ளது. இந்த மூன்றையும் கொண்டு வந்தது யார் ?. நாங்கள் ஆட்சி க்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார் கலைஞர். படிப்படியாக மூடுவேன் என ஜெயலலிதா சொல்கிறார். முதலில் உங்கள் சாராய ஆலைகளை மூடுங்கள். நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, ஆண்ட கருணாநிதிக்கு, ஆள நினைக்கும் விஜயகாந்துக்கு என்ன பொருளாதார கொள்கை இருக்கிறது. 94 வயதில் ஒருவரும் 70 வயதில் இன்னொருவரும் தமிழகத்தை இன்னுமொரு முறை ஆள துடிக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தையே மாற்றுவோம். தமிழகத்தின் தலைநகர் இனி சென்னை இல்லை. நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை பரவலாக்கவுமே 5 தலைநகர். கணினி, துறைமுகத்துக்கு சென்னை தலைநகர். தொழில், வர்த்த தலைநகராக கோவை இருக்கும். மதுரை மொழி, கலை பண்பாடுக்கான தலைநகர், திருச்சி நிர்வாகத்துக்கான தலைநகர் என மொத்தம் 5 தலைநகரை அமைப்போம்.

நீங்கள் கனவில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தலைநகராக அது இருக்கும். அங்கு எல்லாமே இருக்கும். ஆடு, மாடு மேய்த்தல், விவசாயத்தில் இருந்து எல்லாமே அரசு பணி. வேலை இல்லை என ஒருவரும் சொல்லக் கூடாது. ஆடு, மாடு மேய்த்தல் அவமானம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் அது அரசு வேலையாகி விட்டதே. வேளாண் தொழிலை தேசிய தொழிலாக்கி அதை அரசே செய்யப்போகிறது” என்றார். 
நான் முதல்வரானால்... இது கற்பனைக் கட்டுரை அல்ல, சீமானின் பொதுக்கூட்ட பேச்சு! Reviewed by NEWMANNAR on April 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.