யாழில் வெள்ளத்தினால் 5804 பேர் பாதிப்பு....
யாழ். மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த கன மழையினால் 1480 குடும்பங்களை சேர்ந்த 5804 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 17 வீடுகள் முற்றாகவும் 172வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகூடாவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது.
இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலும் காலநிலை மாற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்திருந்து.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி,ஊர்காவல்துறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள மக்கள் இவ் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் கால்வாய்களில் குப்பைகள் கழிவுப் பொருட்கள்அடைத்திருந்தமையாலேயே மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்பட்டதாகவும்,
அவற்றை சீரமைத்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் வெள்ளத்தினால் 5804 பேர் பாதிப்பு....
Reviewed by Author
on
May 17, 2016
Rating:

No comments:
Post a Comment