சவப்பெட்டியில் மம்மியாக 16 வார கரு....
இதுவரை கண்டெடுக்கப்பட்டதிலும் மிகச்சிறிய மனித மம்மி உடல் தற்போது எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது கிசாவில் கிட்டத்தட்ட நூற்றாண்டுகளுக்கு மேலாக தோண்டப்பட்ட குழியிலிருந்து கல் சவப்பெட்டியுடன் மீட்கப்பட்டிருந்தது.
இதற்கு முன் 1907 இல் 44 cm நீளமான சவப்பெட்டி கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இதில் மம்மியாக்கப்பட்ட மனித பாகங்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பினர்.
ஆனால் நுண்ணிய மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை. இவ்வுடல் தற்போது பல ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் x-கதிர்களைப் பயன்படுத்தி மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள முயற்சித்திருந்தனர். ஆனால் அவர்களால் ஏதும் அறியப்பட்டிருக்கவில்லை.
இதன் பின்னர் Cambridge பல்கலைக்கழகத்திலிருந்து வருவிக்கப்பட்ட CT scanner மூலம் ஆராயப்பட்ட போது அது கருக்கலைந்த குழந்தையாக இருக்கலாம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் அக் கருவின் வயதெல்லையையும் அவர்களால் துணிய முடிந்திருக்கிறது.
அதன்படி அக்கருவானது கருத்தரிப்பின் 16 - 18 வார காலப்பகுதியில் கலைந்திருக்கலாம் என நம்புகின்றனர். அத்துடன் சவப்பெட்டியின் அளவு வெறும் சப்பாத்து பெட்டியின் அளவானதாகவே இருந்திருந்தது.
CT scan மூலம் அதன் இருகரங்களும் நெஞ்சுப்பகுதியில் ஒன்றுக்கொன்று குறுக்காக இருந்ததும் அவதானிக்கப்பட்டது.
இதற்கு முன் 25 வார, 37 வார கருக்கள் இரண்டு கண்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இதுவே இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்டதில் மிகச்சிறியது.

சவப்பெட்டியில் மம்மியாக 16 வார கரு....
Reviewed by Author
on
May 13, 2016
Rating:

No comments:
Post a Comment