அண்மைய செய்திகள்

recent
-

ரோட்டில் வைத்து தந்தை மகளுக்கு இடையே நடந்த பாசப்போராட்டம்!


சீனாவில் தனது தந்தையுடன் அதிகநேரம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தால் சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி போக்குவரத்து காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சீனாவின் Zunyi நகரில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றும் அதிகாரி ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அப்போது, தற்செயலாக அந்த பக்கம் வரும் அவருடைய மகள் ரோந்து பணியில் இருக்கும், தனது தந்தையை பார்த்தவுடன் மிகவும் வருத்தமடைந்து கட்டியணைக்கிறார்.

காவல் துறையில் பணியாற்றும் தனது தந்தையால், தன்னுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை, இதனால் தனது தந்தையின் பாசம் முழுமையாக கிடைக்காமல் உணர்ச்சிவசப்பட்டு அச்சிறுமி தனது தந்தையை கட்டியணைத்து அழுகிறாள்.

தந்தையும் தனது மகளை சமாதானப்படுத்தி தூக்கிவைத்துக்கொள்கிறார், இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை அந்நகர போக்குவரத்து காவல் துறை தங்களது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், இதயத்தில் இருந்த பேசுகிறோம், மக்களை காப்பாற்றும் பொறுப்பில்அந்த பொலிசார் இருக்கிறார், இதனை அவரது குடும்பத்தினர் நிச்சயம் புரிந்துகொள்வர், அதுமட்டுமின்றிபொதுமக்களாகிய நீங்களும் இதற்கு ஆதரவாக இருப்பீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

ரோட்டில் வைத்து தந்தை மகளுக்கு இடையே நடந்த பாசப்போராட்டம்! Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.