18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் உள்வாங்க நடவடிக்கை
2016ம் ஆண்டின் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கான படிவங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடம் ஜுன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த இலங்கை பிரஜைகளை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் படிவங்கள் கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் படிவங்களைப் பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களிடம் வழங்கிய பின்னர் அப்படிவங்கள் மாவட்ட செயலகங்கள் ஊடாக தேர்தல்கள் ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஜுன் மாதம் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் வாக்காளர் படிவங்கள் வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் உள்வாங்க நடவடிக்கை
Reviewed by Author
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment