திருகோணமலையில் சட்ட விரோத மண் அகழ்வு - 9 பேர் கைது....
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலப்பொல பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை, மகாவலி கங்கைக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களில் இவர்கள் மணல் ஏற்றியதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், மணல் ஏற்றப்பட்ட ஏழு உழவு இயந்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களுடன், சந்தேகநபர்கள் சேருநுவரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் சட்ட விரோத மண் அகழ்வு - 9 பேர் கைது....
Reviewed by Author
on
May 16, 2016
Rating:

No comments:
Post a Comment