மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திரு விழா....
மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திருவிழா கடந்த19-05-2016 ஆரம்பமாகி கும்பாவிசேக நிகழ்வும் 108 சங்கு சிறப்பு பூஜையும் பஜனையும் இடம்பெற்றதோடு இன்று வைரவர் சிறப்பு பூஜையும் இடம் பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
விசேட நிகழ்வாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பண்டிகை கால மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய குரு மஹா தர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொளரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களுடன் வைரவச்செல்வன் வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவர்களுடன் ஆலய பரிபாலசபையினரும் கலந்து சிறப்பித்தனர்
புதிதாக நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதோடு
அத்தோடு ஆலய நிர்வாக சபையினருக்கும் பொதுச்சேவை செய்த சிறந்த மனிதப்பண்புடைய 05 பேருக்கு பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கொளரவப்படுத்தினர் ..
கட்டிட நிர்மானப்பணிக்காக தங்களால் இயன்ற உதவிகளை தனவந்தர்கள் பொதுமக்கள் அனைவரும் மனவுவந்து அன்பளிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் நிர்வாகம் ஆலயபரிபாலனசபை .
மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திரு விழா....
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment