அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் றோகினியின் மரணம் சொல்லும் உண்மை?

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழிக்கு அமைவாக மக்கள் தமது உடல் ரீதியாக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு கடவுளுக்கு அடுத்த படியாக வைத்தியர்களை நம்பி சிகிச்சைகளுக்காக செல்கின்றனர்.

ஆனால் இன்று வைத்தியத்துறையில் நம்பிக்கை இன்மையை தோற்றுவிக்கும் சந்தர்ப்பங்களும் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.தெரிந்தோ,அல்லது தெரியாத நிலையில் சில தவறுகள் ஏற்படுகின்றது.

எனினும் தொடர்ச்சியாக அவ்வாறான தவறுகள் ஏற்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனினும் குறித்த பிரச்சினைகள் நோயாளர்களுக்கே ஏற்படுகின்றது. பிரச்சினைகள் குறித்த வைத்திய சாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற போதும்,சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டும், பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தாய் ஒருவரின் மர்ம மரணம் அனைவரையும் சந்தேகத்திற்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளுவதற்காக தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியைச் சேர்ந்த, தலைமன்னார் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றுகின்ற இரண்டு பிள்ளைகளின் தாயான தமிழரசன் றோகினி(வயது-39) என்ற பெண் கடந்த திங்கட்கிழமை காலை தனது சத்திர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட வைத்திய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

எனினும் பல மணி நேரங்களின் பின்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக மன்னார் வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவில் உள்ள வைத்தியர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த பெண் காலை 10.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும், நீண்ட நேரம் தம்மை ஏமாற்றிய நிலையில் பின் 'மாரடைப்பின்' காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

எவ்வித பிரச்சினைகளும் இன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சத்திர சிகிச்சை ஆராம்பிப்பதற்கு முன்னர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் மர்மமாக உள்ளது.

எனினும் இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை தரப்பினர் உண்மைத் தகவலை கூற மறுத்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகங்கள் அதிகரித்துள்ளது.மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஏனைய சக சுகாதார உதவியார்களும் குறித்த சக ஊழியரின் மரணம் குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸ் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகங்கள் அதிகரித்துள்ளது.நீண்ட நேரத்தில் பின் குறித்த பெண்ணின் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த பெண்ணின் மர்ம மரணம் குறித்து உறவினர்களும்,சக ஊழியர்களும் தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர். சக ஊழியர்களினால் கூட குறித்த பெண்ணின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அனைவருக்கும் சந்Nதுகத்தையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மாலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த நீதவான் குறித்த சடலத்தை பார்வையிட்டார்.

இதன் போது குறித்த பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சக ஊழியர்களும்,உறவினர்களும் தெரிவித்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த சடலம் மாத்தளை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது இறந்த பெண்ணின் கணவர் தமிழரசன் மற்றும் உறவினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மற்றும் நீதவானின் அறிக்கையினையும் பரிசோதனை செய்த மாத்தளை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டி.எல் வைத்தியரட்ன சடலத்தை சடலத்தை பெற்றுக்கொண்டு சடல பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது மன்னார் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்து அறிக்கையில் குறித்த பெண் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பெண்ணின் உடல் உறுப்புக்களின் எவ்வித பாதிப்புக்களும் இல்லை.அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கவில்லை என சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்ததாக அங்கு சென்ற உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகங்கள் மேலும்,மேலும் வலுவடைந்துள்ளது.

இந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுனர் வைத்திய கலாநிதி டி.எல் வைத்திய ரட்ன அவர்களினால் குறித்த பெண்ணின் முக்கிய உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் சடலம் வியாழக்கிழமை காலை மன்னாரிற்கு கொண்டு வரப்பட்டு தலைமன்னார் ஸ்ரேசனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.பின் அன்று மாலை தலைமன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் உண்மை வெளிப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டிருப்பின் எதிர்காலத்தில் இவ்வாறு எவருக்கும் நிகழக்கூடாது. என மக்களும் சக ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகள் இன்று தாயை இழந்துள்ள இந்த சோகமான சம்பவம் எவறுக்கும் நிகழக்கூடாது என்று மன்னார் பொது வைத்தியசாலை தொடர்பில் பலரது கருத்துக்களும்,பேச்சுக்களும் வேதனையையும், கவலையையும் ஏற்படுத்துகின்றது.

மன்னாரில் உள்ள பலர் சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள இருந்த போதும், குறித்த பெண்ணின் மரணத்தினால் தற்போது அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே கடவுளுக்கு அடுத்ததாக நம்பப்படும் வைத்தியர்கள் மீதுள்ள நம்பிக்கை ஒரு போதும் வீண்போகக்கூடாது.

மன்னார் பொது வைத்தியசாலை குறித்த பெண்ணின் மரணம் குறித்து முரண்பாடான கருத்துக்களை தெரிவித்தமையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதற்கு முதற் காரணமாகும்.எனினும் குறித்த பெண்ணின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மரணத்தின் உண்மைகள் வெளிப்பட வேண்டும். அதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும்.தவறுகள் ஏற்பட்டிருப்பின் அவை திருத்தப்பட வேண்டும். மன்னார் மாவட்ட வைத்தியசாலையும் முன்னேற்றப்பட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள் 

புதைக்கப்பட்டது இரண்டு பிள்ளையின் தாயனா ரோகினியை மட்டுமல்ல நீண்டகாலமாக கேட்கும்உயிர்பாதுகாப்பு நீதியை....... முழுமையான படங்களுடன்


மன்னார் பொதுவைத்திய சாலையில் பலியான ரோகினி தமிழரசன் மாரடைப்பினால் இறக்கவில்லை- மாத்தளை JMO வைத்திய கலாநிதி வைத்திய ரத்திண மருத்துவ அறிக்கை.....

கொலைக்களமாக மாறியுள்ள மன்னார் பொது வைத்திசாலை ----மீண்டும் ஒரு உயிர் பலி-Photos

மன்னார் பொதுவைத்திய சாலையின் கடமைபுரியும் சில வைத்தியர்களின் அசமந்தப்போக்கும் கவனயீனமும்….நடந்தது என்ன?.. முழுமையான தகவல் 
தலைமன்னார் றோகினியின் மரணம் சொல்லும் உண்மை? Reviewed by NEWMANNAR on May 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.