மன்னார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு ஞானம் அறக்கட்டளை நிவாரணம் வழங்கி வைப்பு.---படம்
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு ஞானம் அறக்கட்டளை நிவாரணப்பொருட்களை இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்த 300 குடும்பங்கள் பிரதேச செயலாளர்களினூடாக தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கோவில் குளம் கிராமத்தில் 8 குடும்பங்களும்,பாலியாற்று பகுதியில் 27 குடும்பங்களும்,தேவன் பிட்டி கிராமத்தில் 80 குடும்பங்களும், மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் புதுக்கமம்,வட்டிப்பித்தான் மடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 160 குடும்பங்கள், சௌத்பார் பகுதியில் 25 குடும்பங்களுக்கும் இவ்வாறு உலர் உணவுப்பொருட்கள்,சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் மற்றும் போர்வைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. ஞானம் அறக்கட்டளையின் மன்னார் கிளை பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு குறித்த உலர் உணவுப்பொதிகளை வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு ஞானம் அறக்கட்டளை நிவாரணம் வழங்கி வைப்பு.---படம்
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment