மன்னார் அடம்பன் இத்திக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள ஆதவன் அறநெறிப்பாடசாலை உடைப்பு---
கடந்த சில தினங்களுக்கு முன்பு இனந்தெரியாதோரால் மன்னார் அடம்பன் இத்திக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள ஆதவன் அறநெறிப்பாடசாலை உடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது மன்னார் மக்களின் மதங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைத்தன்மையினையும் சமத்துவத்தினையும் குழப்புவதற்கான ஒரு சில விஷமிகளால் ஏற்படுத்தப்படுகின்ற வன்செயலாகும். ஏன்எனில் ஆன்மீகநெறியனை போதிக்கின்ற அறநெறிப்பாடசாலையினை உடைப்பதென்பது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்ற அபத்தமான செயலாகும் என்ன பிணக்குகள் இருந்தாலும் பேசித்தீர்த்துக்கொள்ளப்படவேண்டும்.
அதைவிடுத்து இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபடும் செயலானது மனம்வேதனைக்குரிய விடையமாககும். இவ்விடையத்தினை மன்னார் அறநெறிப்பாடசாலைகளின் இணையம் வன்மையாககண்டிப்பதோடு இனிவருங்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறமல் இருக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கையினை மேற்கொள்வது நன்மை பயக்கும் செயலாக அமையும்.
மன்னார் அறநெறிப்பாடசாலைகளின் இணையம்.
மன்னார் அடம்பன் இத்திக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள ஆதவன் அறநெறிப்பாடசாலை உடைப்பு---
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment