விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்து: 42 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
கனடாவில் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 47 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவில் மாண்ட்ரியல் நகரில் இருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தொலையில் உள்ள Mont-St-Hilaire பாடசாலையில் இருந்து பள்ளிப்பேருந்தானது 116 நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் பள்ளிப்பேருந்து நிலை தடுமாறி சரிந்துள்ளது.
மேலும் எதிரே வந்தகார் நொறுங்கியுள்ளது,
இதனால் நெருக்கடியில் சிக்கிய மாணவர்வர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது, 1 மாணவர் உயிரிழந்துள்ளார், 6 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான மாணவர்கள் 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது இந்த பாதை அடைக்கப்பட்டுள்ளது, மேலும் விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான பள்ளிப்பேருந்து: 42 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
Reviewed by Author
on
May 14, 2016
Rating:

No comments:
Post a Comment