அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் ஒரு தாயின் வேதனை..! யாருக்குத் தெரியும்?


இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக தனது மூன்று மகன்களையும் இழந்து மிகவும் வருமையில் தாய் ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

திருகோணமலை - மூதூர் மணச்சேனை மல்லிகைத்தீவு என்னுமிடத்தில், துரைசிங்கம் யோகாம்பிகை(64) என்னும் தாயாரே மிகவும் வறுமையில் தவித்து கொண்டிருக்கின்றார்.

அவருடைய மூத்த மகன் து.வரதராஜனை இலங்கை இராணுவத்தினர் 1990ஆம் ஆண்டு (அவருக்கு 20 வயதில்) கைது செய்து காணமல் செய்துள்ளனர்.

இரண்டாவது மகன் து.நடேந்திரன் 1991ஆம் ஆண்டு (அவருக்கு 20 வயதில்) தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து செயற்பட்டு 2006ஆம் ஆண்டு திருகோணமலை நிலாவெளிச்சமரில் வீர மரணமடைந்துவிட்டார்.

மூன்றவது மகன் 2006ஆம் ஆண்டு தமிழீழ காவற்துறையில் செயற்பட்டு கிழக்கின் யுத்தத்தால் உயிரிழந்துவிட்டார்.

மூன்று புதல்வர்களையும் இழந்த தாய், கணவரின் உதவியுடன் ஓரளவு வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது கணவருக்கும் வாய்ப்புற்றுநோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பப்புற்றுநோய் என்பதனால் குணப்படுத்த முடியும் என்று யாழ்மாவட்ட வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளபோதும், போக்குவரவுச் செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் குறித்த தாய் கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றார்.

ஒவ்வெறு நாளும் கஞ்சிகுடித்து வாழ்ந்து வருவதாகவும் தாங்கள் இறந்தால் ஊர் மக்கள் தான் காசு சேர்த்து தம்மை அடக்கம் செய்வார்கள் என்றும் மிகவும் மனஉளைச்சலுடனும், வேதனையுடன் தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாய்க்கு உதவி செய்ய நினைக்கும் உலகத் தமிழர்கள் கீழ்காணும் முகவரிக்கு முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தொலைபேசி இல : 0094774565812

கணக்கு இல : BANK OF CEYLON (BOC)73519872

பெயர் : T.YOGAMBIHAI

இடம் : MUTHUR-118 MANACHCHENAI MALLIGATHIVU

NIC NO : 536042628V







கிழக்கில் ஒரு தாயின் வேதனை..! யாருக்குத் தெரியும்? Reviewed by Author on May 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.