அண்மைய செய்திகள்

recent
-

6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்!


•தமிழ் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை

•காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை

•இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை

•உள்ளக விசாரணைகூட இன்னும் ஆரம்பிக்கப்டவில்லை

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென தெரிவுசெய்யப்பட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொகுசு வாகனம் இறக்குமதி செய்துள்ளார்.

•வன்னியில் ஒரு தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

•கிளிநொச்சியில் ஒரு சிறவன் பரீட்சைக் கட்டணம் கட்டுவதற்காக திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்.

•முல்லைத்தீவில் மரணமான முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது மரணச்சடங்கு செலவை அரச செலவில் செய்யும்படி கடிதம் எழுதிவிட்டு இறந்துள்ளார்.

நாடும் மக்களும் இப்படியான நிலையில் இருக்கும்போது மக்களுக்கு சேவை செய்ய என தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்ய வாகனம் தேவைதான். ஆனால் அதற்காக இத்தனை பெறுமதியான சொகுசு வாகனம் தேவையா?

அதைக்கூட மதிப்பு குறைவாக காட்டி சட்டவிரோதமாக மோசடி செய்து இறக்குமதி செய்வது கேவலம் இல்லையா?

புதிய வாகனத்தை இறக்குமதி செய்துவிட்டு பழைய பயன்படுத்திய வாகனம் என பொய் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் அவ் வாகனத்தின் விலை 1 கோடியே 67 லட்சம். ஆனால் அதன் விலை 88 லட்சம் என பொய் கூறப்பட்;டுள்ளது.

Rs 2,652,636 on Customs Import Duty (CID),
Rs 663,159 on Port Aviation Levy (PAL),
Rs 29,488,467 on Excise Import Duty (XID),
Rs. 1,042,928 on Nation Building Tax (NBT)
Rs. 7,821,960 on Value Added Tax (VAT).

6 கோடி பெறுமதியான இந்த சொகுசு வாகனத்திற்கு வரியாக வெறும் 1750 ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை விற்று வங்கியில் போட்டால் வட்டியாகவே மாதம் 6 லட்சம் ரூபா வரும். இவர் மட்டுமல்ல இவர் பரம்பரையே எந்த வேலைக்கும் போகாமல் சொகுசாக வாழலாம்.

இப்போது புரிகிறதா ஏன் எல்லோரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக துடிக்கிறார்கள் என்று?



6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் இறக்குமதி செய்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்! Reviewed by Author on May 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.