அண்மைய செய்திகள்

recent
-

ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை அடகு வைத்த நபர்: வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்!


உத்தர பிரதேச மாநிலத்தில் மனைவியை, கணவனே ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் அடகு வைத்த இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்தர் சிங் என்ற நபர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் ஜஸ்மீட் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கான்பூரின் கோவிந்த் நகரில் வாழ்ந்து வந்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பொருள் உள்ளிட்டவற்றை இழந்த நிலையில், ரவீந்தர் சிங், அவரது மனைவி கவுரை அடகு வைத்து விளையாடி இழந்துள்ளார். தற்போது ரவீந்தர் சிங் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சூதாட்டத்தில் வெற்றிபெற்ற ஆண்கள் சிலர் ஜஸ்மீட் கவுரை துன்புறுத்தி வந்துள்ளனர், பாதிக்கப்பட்டுள்ள கவுர், சமூக ஆர்வலர்கள் சிலர் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இது தொடர்பாக அளித்துள்ள புகாரில் ஐபிஎல் போட்டிகளின் போது தன் கணவர் பணம் பொருள் உள்ளிட்டவற்றை இழந்த நிலையில் தன்னை வைத்து தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் அவர் தோற்றதால் தற்போது சம்பந்தபட்ட நபர்கள் தம்மை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புகாரில் தன்னை துன்புறுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை அடகு வைத்த நபர்: வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்! Reviewed by Author on May 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.