அண்மைய செய்திகள்

recent
-

மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்----அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து!


புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கடத்தல் படகுகள் மூலம் ஐரோப்பாவில் குடியேற செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக படகுகளில் ஆட்களை ஏற்றி வருவதால் விபத்து ஏற்படுகிறது.

இது போன்று கடந்த 3 தினங்களில் அகதிகளை ஏற்றி வந்த 3 படகுகள் விபத்துக்குள்ளானதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர்.

கடந்த புதன் கிழமை 600 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அவர்களில் 100க்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர். இதில் பலரை காணவில்லை.

அதேபோல் கடந்த வியாழக்கிழமை 670 பேரை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 550 பேர் மாயமாகினர்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 135 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 45 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும், பலரை காணவில்லை.

குறித்த அனைத்து படகுகளும் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த தருணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்----அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து! Reviewed by Author on May 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.