மீண்டும் ஒரு போர்த்திணிப்பாக வடக்கு ஆளுநரின் கருத்துக்கள் (சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு)
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்கள் மீது மீண் டும் ஒரு போரை திணிக்கும் செயற்பாடாக அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களில் உள்ள ஆளுநர் கள் தமது கடமையை மாத்திரம் செய்து கொண்டு இருக்கும்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தமது அதிகாரத்திற்கு அப்பால் சென்று செயற்பட்டு வருவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜி னோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வடமாகாண ஆளுநரின் இக்கருத்துக்கள் தொடர் பில் கருத்து வெளியிட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடு கையில், முன்னாள் போராளி களை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்கு அருகதை யற்ற வடமாகாண ஆளுநர், வெளி யில் இருக்கும் முன்னாள் போராளி களை இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறுவது, நாட்டில் தமிழ் மக் களை மீண்டும் அடக்குமுறைக் குள் வைத்திருக்கும் ஒரு முயற்சி.
இலங்கையின் இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வு காணா மல், தமிழ் மக்களை குருதி சிந் தும் நிலைக்கு மீண்டும் தள்ளும் வடமாகாண ஆளுநர் போன்றோ ரின் செயற்பாடானது மிகவும் வேத னைக்குரியது.
காணாமல் போனோர் தொடர் பில் விசாரணை செய்யும் மக்ஸ் வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவும் விடு தலைப் புலிகள் மீது குற்றம் சுமத்து வதையே குறிக்கோளாக கொண் டுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை மழுங்கடிக் கச் செய்வதாகவே இவர்களின் இத் தகைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.
இதன் அடிப்படையிலேயே வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயும் தற்போது செயற்பட்டு வரு கின்றார் என சிறிதரன் மேலும் தெரி வித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் றெஜி னோல்ட் கூரே தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலை வரும், தேசிய சகவாழ்வு கலந்துரை யாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் மற்றும் வடமாகாண முதலமைச் சர் விக்னேஸ்வரன் ஆகியோரும் அண்மையில் கவலையும், விசன மும் வெளியிட்டிருந்தமை குறிப் பிடத்தக்கது.
மீண்டும் ஒரு போர்த்திணிப்பாக வடக்கு ஆளுநரின் கருத்துக்கள் (சிறிதரன் எம்.பி குற்றச்சாட்டு)
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment