பேஸ்புக்கில் இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக விற்க முயன்ற ஐ.எஸ் அமைப்பு!
பேஸ்புக் பக்கத்தில் எங்களிடம் இளம்பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்ய உள்ளனர் என்று வெளியான விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தங்களிடம் சிக்கும் பெண்களை அதிக அளவில் தங்களது தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர்.
அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை மற்றவர்களிடம் விற்கவும் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மே 20ம் திகதி, பேஸ்புக் வலைத்தளத்தில் தன்னை அபு ஆசாத் அல்மேனி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஐ.எஸ். போராளி ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு, இது 8 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்டது என குறிப்பிட்டுள்ளான்.
அந்த புகைப்படத்தில் 18 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் முகத்தில் கறுப்பு துணியால் மறைக்கப்பட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணி நேரங்களில், அதே நபர் மற்றொரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த பெண் ஆயிரம் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கத்தில் இல்லாத வகையில் வெளியான இந்த பதிவு சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற பதிவு நூற்றுக்கணக்கான பெண்கள் ஐ.எஸ் அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளது அதிகரித்துள்ளதை காட்டுவதாக உள்ளது என்று தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பேஸ்புக்கில் இளம்பெண்களை பாலியல் அடிமைகளாக விற்க முயன்ற ஐ.எஸ் அமைப்பு!
Reviewed by Author
on
May 30, 2016
Rating:

No comments:
Post a Comment