மன்னார் மக்களே….!!!! அவதானம் மயக்க வைத்து நகைகள் கொள்ளை…..!!!!
மன்னார் மண்ணில் புதிதாக ஆரம்பித்துள்ள கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இனம் தொரியாத ஆண் மற்றும் பெண் இருவரினால் மன்னார் பனங்கட்டுக்கொட்டினைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது நகைகள் மற்றும் பணத்தினை பறிகொடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் அறியவருவது என்னவெனில் சம்மந்தப்பட்ட பெண் குறித்த தினத்தில் சத்தோசாவில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வெளியில் வரும் பொழுது அந்த ஆணும் பெண்ணும் இருவருமாக சேர்ந்து இவரிடம் நகைக்கடை எங்குள்ளது…? என்று வினவியுள்ளனர் இவரும் அவர்களுக்கு வெலிகம கொட்டல் பக்கம் உள்ளதாக சொல்லி விட்டு செல்கையில் இவரை பின்தொடர்ந்த அந்த இருவரும் கோர்லீப் கொம்பனிக்கு முன்னாள் வைத்து மிகவும் அன்புடன் அன்ரி என அழைக்கவும் இவர் அவர்களின் அருகில் சென்று என்ன என்று வினவியுள்ளார்.....
அப்போது அவர்கள் இரத்தினக்கல் போன்றதொரு கல்லினை காட்டியுள்ளனர் (மந்திரம் மூலம் வசியம் செய்து இவ்வாறு செய்திருக்கலாம்)அந்தக்கல்லினை பார்த்தவுடன் தான் தன்னையறியாமல் அத்தனை நகைகளையும் பணத்தினையும் களற்றி கொடுத்ததாகவும் பத்து நிமிடங்களுக்கு மேல் தான் சுய நினைவு அற்ற நிலையில் திசையறியாமல் அவ்விடத்திலேயே நின்றதாகவும். பத்து நிமிடம் கழித்து தான் தனது நகைகள் மற்றும் பணம் பறிபோயுள்ளதை உணர்ந்து பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை எழுதிக்கொண்ட பொலிசார் விரைந்து பேருந்து நிலையங்கள் கடைகள் பொது இடங்கள் அனைத்திலும் தேடியுள்ளனர் அந்த இருவரும் மாயமாய் மறைந்து விட்டனர்.
பொலிஸ் நிலையத்தரிற்கு அருகில் நடைபெற்றதால் பொலிசாரின் சிசிரி கமராவில் இக்காட்சி பதியப்பட்டுள்ளதாகவும் வழிப்பறிக்கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வவுனியாவில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் களத்தில் குதித்துள்ளனர்……
மன்னார் மக்களே இப்போது புதிய புதிய முறையில் கொள்ளைச்சம்பவங்கள் கடத்தல்கள் இன்னும் பல விடையங்கள் அரங்கேறுகின்றது ஒவ்வொருவரும் விழிப்பாய் இருங்கள் தெரியாத நபர்களிடம் பேசவோ… அவர்கள் தரும் எப்பொருளையும் கை நீட்டி வாங்கவோ பார்க்கவோ வேண்டாம்….!!!!
குறிப்பாக இவ்விடையத்டதில் குழந்தைகள் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் அவதானமாய் இருங்கள் ஆண்கள் இனம் தொரியாதவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாகும் நபர்களையும் அவர்களது செயற்பாடுகளையும் கவனித்து பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்….
சிந்திப்போம் செயலாற்றுவோம்…. !!!!!
மன்னார் மக்களே….!!!! அவதானம் மயக்க வைத்து நகைகள் கொள்ளை…..!!!!
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment