தென் இலங்கை மற்றும் தென் இந்திய மீனவர்களின் மித மிஞ்சிய வருகையினால் மன்னார் கடல் வளம் முற்றாக அழியும் நிலை-கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம்.photos
தென்னிலங்கை மீனவர்களின் வருகை மன்னார் மாவட்டத்தில் பாரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.அவர்களின் மித மிஞ்சிய வருகையின் காரணமாக எமது கடல் வளம் முற்றாக அழிக்கப்பட்டு வருவதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பட்ட பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.மெராண்டா, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹர்மன் குமார,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாஸ், மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஜெஸ்டின் சொய்சா,மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலறும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
வடமாகாண மீனவர்கள் முகம் கொடுக்கின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளோம்.
குறித்த கலந்துரையாடல் எதிர்கால மீனவர்களின் நல்வாழ்வுக்கானதாக அமைந்துள்ளது.குறித்த கூட்டத்தில் தென்பகுதி மீனவர்களின் வருகையும்,அதே போன்று தென்னிலங்கை மற்றும் தென் இந்திய மீனவர்களின் வருகையும்,இதனால் வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சினைகளை எதிர்காலத்தில் எவ்வாறு தீர்த்துக்கொள்வது,கடற்தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடினோம்.
குறிப்பாக தொடர்ச்சியாக நாங்கள் பேசிவரும் தென்னிந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து குறைந்த அளவு பேசிக்கொண்டாலும்,தென் இலங்கை மீனவர்களின் வருகை இன்று மன்னார் மாவட்டத்தில் பாரிய ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.
தென்னிலங்கை மீனவர்களின் மித மிஞ்சிய வருகையின் காரணமாக எமது கடல் வளம் முற்றாக அழிக்கப்படுகின்றது.
அவர்களினால் மேற்கொள்ளப்படும் தொழில் முறைகளின் மூலம் எனது மீனவர்கள் பாதீக்கப்படுகின்றனர்.கடந்த காலங்களில் அவர்களினால் மன்னார் கடற்கரைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொட்டு வாடிகளை அகற்றிச் சென்றுள்ளனர்.
ஆனால் தற்போதைய காலத்தில் அவர்களினால் அமைக்கப்படுகின்ற கொட்டு வாடிகள் அகற்றிச் செல்லப்படுவதில்லை.
இதனால் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் எமது மீனவர்களுக்கு பாரிய இடையூறுகலாக குறித்த கொட்டு வாடிகள் காணப்படுகின்றது.
இவற்றை அகற்றுவது எவ்வாறு?எதிர் காலத்தில் மீனவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டங்களை முன்னெடுப்பது எவ்வாறு என பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்-

தென் இலங்கை மற்றும் தென் இந்திய மீனவர்களின் மித மிஞ்சிய வருகையினால் மன்னார் கடல் வளம் முற்றாக அழியும் நிலை-கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம்.photos
Reviewed by Author
on
May 31, 2016
Rating:

No comments:
Post a Comment