கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமானவை! இணைந்து செயற்பட்டாலே தீர்வு! சிறீதரன்
பள்ளிக்குடா பிரதேசத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கபட்டுள்ள தேவாலயத்தை மீட்பதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிக்குடா மற்றும் நாச்சிக்குடா பிரதேசங்களுக்கு மக்களின் தேவைகளை அறியும் பொருட்டு கடந்த வாரம் அங்கு விஜயம் செய்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பள்ளிக்குடா பாடசாலை செட்டியார் தரவெளி விளையாட்டுக்கழகத்தினர் கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாகிகளுடனும் தேவைகள்குறித்து கலந்துரையாடினார்.
நாச்சிக்குடா கிராமத்தின் அன்னைவேளாங்கன்னி, நல்லாயன் போன்ற கடற்றொழிலாளர் அமைப்புக்களுடனும் கரடிக்குன்றுகிராம அமைப்பினருடனும் கலந்துரையாடி தேவைகள் குறித்து அறிந்து கொண்டார். நாச்சிக்குடா முஸ்லிம் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர், பாடசாலையின் பௌதீக வளத்தேவைகளில் மாணவர்களுக்கான தளபாட வசதி குறித்துபார்வையிட்டதுடன் விரைந்து அதற்கான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றார்.
பயணத்தின் நிறைவில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
பள்ளிக்குடாமற்றும் நாச்சிக்குடா பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் இன்றுபுலனாய்வாளர்களுக்கு பயந்து வாழுகின்ற நிலையை காணமுடிகின்றது.
நகரங்களில்வெளியுலகப்பார்வைக்காக இராணுவ இறுக்கங்கள் குறைந்திருந்தாலும் இக்கிராமங்கள்நேரடி மறைமுக அழுத்தங்களை அறிய முடிந்தது. பள்ளிக்குடாவில் தேவாலயம்கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது மிக மோசமான அடிப்படை மற்றும் மதஉரிமை மீறலாகும்.
50 வருடங்களுக்கு மேலாக பள்ளிக்குடா மக்களால் வணங்கப்பட்டுவருகின்ற தேவாலயத்தினுள் ஆயுதப்படைகள் அமர்ந்திருப்பது இறைநீதிக்கும்மனுநீதிக்கும் எதிரானதாகும் இது குறித்து விரைவில் அரச தலைவர்க்கு அம்மக்களின்மனக்குறைகளை தெரிவிப்பேன்.
இந் நிலையை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. மேலும் நாச்சிக்குடாவிலும் பல்வேறு தேவைகள் இருக்கின்றன. பாடசாலை தேவைகள் மிகஅதிகமானவையாக இருக்கிறது. அதிக பௌதீக வளப்பற்றாக்குறைகளோடு பிள்ளைகள்கற்கிறார்கள்.
மக்களும் பல்வேறு விதமான தேவைகளை எனது கவனத்திற்குகொண்டுவந்திருக்கிறார்கள். இவர்களுடைய தேவைகள் விசேடமானவை.கடற்றொழில் வளங்களைபாதுகாப்பது சட்டவிரோத மீன் பிடிகளை கட்டுப்படுத்துவது பாதிக்கப்பட்டமீனவர்களுக்கான மானியங்கள் என பலவற்றை குறிப்பிட்டார்கள்.
இவற்றை நிறைவுசெய்வதற்க்கு நாங்களும் மாகாண அரசும் அதிகாரிகளும் கூட்டு இணைந்து செயற்படுவதுஅவசியமாகும்.
விரைவில் இது குறித்து விசேடகலந்துரையாடல்களை உரிய அதிகாரிகளோடுநடாத்தி தீர்வுகள் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன் என்றார்.
இந்த பயணத்தின்போதுமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கொள்கைப் பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன், முழங்காவில் பிரதேச அமைப்பாளர்களான குவேந்திரன், தனராஜ், நாச்சிக்குடாஅமைப்பாளர் திருமதி அனற், பள்ளிக்குடா கிழக்கு அமைப்பாளர் யசோதரன் ஆகியோரும்கலந்து கொண்டனர்.
கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விசேடமானவை! இணைந்து செயற்பட்டாலே தீர்வு! சிறீதரன்
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment