க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!
2015ம் ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு ஒன்று தீவகம், புளியங்ககூடலில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 14ம் திகதி இடம்பெற்ற இந்நிகழ்வினை, புளியங்கூடல் மாணவர் வளாகம் என்ற முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
புளியங்கூடல் மாணவர் வளாகம் மகிழ்வுடன் நடாத்தும் கெளரவிப்பு பரிசளிப்பு விழா, என்ற பெயரில் திறமைச் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாவும், ஏனைய சித்திகளைப் பெற்ற 23 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.
அத்துடன், சித்திபெற்ற மாணவர்களில் குடும்பத்தலைவர் இல்லாத 4 மாணவர்களுக்கு, ஓர் குடும்பத்தில் உள்ள 4 பிள்ளைகள் ஒவ்வோரு மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபாவை வழங்கியதுடன், அவர்களின் உயர்தர பகுதிநேர வகுப்புகள் போக்குவரத்துச் செலவுக்காக மாதாமாதம் 5,000 வழங்கவுள்ளனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவகம் வலய கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் சுந்தரசிவம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment