அண்மைய செய்திகள்

recent
-

மட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு!


சுமார் 135 பேரை உள்ளடக்கிய கனடாவின் உயர்மட்ட பாராளுமன்றக் குழு தலைமையிலானவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்கள்.

குறிப்பாக கனடாவின் வெளிவிவகார மற்றும் மனிதநேய உதவிக்கான அமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் சகல பாகங்களிற்கும் விஜயம் செய்யவுள்ளது.

இந்தக் குழுவில் கனடாவில் வியாபாரத்தில் கோலோச்சும் பல பிரபல தமிழ் முதலீட்டாளர்களும், வியாபார அதிபர்களும் இணைந்து செல்கின்றனர்.

கட்சி பேதமற்ற வகையில் சகல கட்சிகளையும் உள்வாங்கி லிபரல் கட்சி அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு முன்னதாக, லிபரல் கட்சி தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகளில் சிறிய அளவையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தற்போதைய அரசிற்கு நெருக்கமாக தமிழர் அமைப்பினர் கொடுத்து வருகின்றனர்.

இதற்குச் செவி சாய்த்துள்ள கனடிய அரசு நிவாரணப் பணிகளில் எவ்வாறு உதவலாம், அங்க அவயங்களை இழந்தோருக்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய தகவல்களைப் பெறவுள்ள அதே சமயத்தில், அண்மையில் இடம்பெற்ற மண்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றிற்கான இடர் நிவாரண நிதியொன்றையும் அறிவிக்கவுள்ளது.

மட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு! Reviewed by Author on May 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.