சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 28 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு...
அண்மையில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 28 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்,
நாடு முழுவதும் 63,318 பாடசாலை மாணவர்கள் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை, க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31ம் திகதியுடன் முடிவடைகிறது.
எனினும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இதனை ஜூன் மாதம் 10ம் திகதி வரை நீடிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 28 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு...
Reviewed by Author
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment