அமெரிக்காவை பலாத்காரம் செய்த நாடு எது?
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் சீனாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்டியானாவில் பிரசாரம் மேற்கொண்ட டொனால்ட், அமெரிக்காவுக்கு அதிக அளவிலான வர்த்தக ஏற்றுமதியை மேற்கொண்டு வரும் சீனா, நியாயமற்ற கொள்கைகளை பரப்பி வருகிறது.
மேலும், உலக சந்தையில் நாணயங்களை கையாள்வதில் போட்டியிட்டும் வரும் சீனாவால் அமெரிக்காவின் தொழில்கள் நலிவடைந்து விட்டன.
இதன் மூலம் சீனா அமெரிக்காவை பலாத்காரம் செய்துவிட்டது, அமெரிக்கர்களிடம் ஆற்றல் இருக்கிறது, எனவே சீனா நம் நாட்டை பலாத்காரம் செய்வதற்கு இனியும் அனுமதிக்ககூடாது,
சீனாவின் சட்டவிரோத ஏற்றுமதி மானியங்கள் மற்றும் தொழிலாளர் தளர்வு கொள்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதில் இது ஒன்றும் புதிது கிடையாது, ஏனெனில் இதற்கு முன்னர் இந்தியாவில் இயங்கி வரும் கால்சென்டர்களை கிண்டல் செய்து கருத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை பலாத்காரம் செய்த நாடு எது?
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment