அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாணத்தில் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்படவேண்டும் - வட மாகாண ஆளுநர்


வட மாகாணத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்பதற்காககலவன் பாடசாலைகள் உருவாக்கபட வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கூட்டுக் கட்டளைத் தலைமையகத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் விஸ்வமடு இராணுவ பயிற்சி முகாமை பார்வையிட சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டு மக்களை இன,மத,பேதமின்றி ஒன்றிணைக்கும் ஓர் இடமே பாடசாலையாகும்.

இதன் மூலமே நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். எனவே, கலவன் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமே இதனை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இடங்களிலேயே சிறந்தவர்களை உருவாக்கலாம். ஆகவே இலங்கையை உலக நாடுகளின் முன்னோடியாக மாற்றுவதற்கான வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரின் உதவியுடன் வட மாகாணத்தில் பல இடங்களில் முன்பள்ளிகள் நடாத்தப்பட்டு வருகின்றமையானது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விஸ்வமடு புனர்வாழ்வு நிலையத்தில் தற்போது 3500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று வருவதோடு 3000 பேர் புனர்வாழ்வுப் பெற்று சமூகத்துடன் இணைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தில் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்படவேண்டும் - வட மாகாண ஆளுநர் Reviewed by Author on May 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.