நாய் உணவை சாப்பிட்டு அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்!
ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக, இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஹொட்டலில் செரீனா தங்கியுள்ளார்.
அந்த ஹொட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு ஐட்டங்கள் இருந்தன.
தனது செல்ல குட்டி நாய் 'சிப்'க்கு அதை வாங்கிகொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்துள்ளார். ஆனால் அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாய்கள் மட்டுமே சாப்பிட முடியும், மனிதர்கள் சாப்பிட கூடாது என்று அந்த ஹொட்டல் மெனுவில் இணைப்பு போட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.
சோறு மற்றும் சால்மோன் மீன்கலக்கப்பட்ட அந்த உணவை தான் சாப்பிட்டதை செரீனா வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்று, சக அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாய் உணவை சாப்பிட்டு அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்!
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment