அண்மைய செய்திகள்

recent
-

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும் (நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை)


வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இங்குள்ள இளைஞர்களுக்கு தேவைற்ற வகையில் பணம் அனுப்புவதை தவிர்த்து போரினால் பாதிக்கப்பட்ட, அவயங்களை இழந்த சிறுவர்களுக்கு உதவ வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மனிதவாழ்வில் விழுமியங்கள் எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் சத்ய சாய்பாபா பாடசாலையில் நேற்றையதினம் காலை நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 புலம்பெயர் தமிழர்கள் இங்கு வந்து போகும் போது போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் சென்று போக வேண்டும்.
அங்கு ஆயிரக்கணக்கான சிறுவர்கள், கல்வி கற்க முடியாத வறுமையிலும், அங்கவீனர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தனியே ஆலயங்களுக்கு மட்டும் பணத்தை செலவழிக்காதீர்கள். யுத்தத்தால் வறுமையாக்கப்பட்ட மக்களையும் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.

நான் அனுப்பிய பணம்தான் ஒரு நீதிபதி, வைத்தியரை, பொறியியலாளரை, உருவாக்கியது என புலம்பெயர் மக்கள் சொல்ல முடியுமா? மாறாக நான் அனுப்பிய பணம் தான் இங்கு பல நூறு ரவுடிகளை உருவாக்கியது என்று தான் அவர்களால் கூற முடியும்.

மேலும் நான் எனது கடமையை செய்வேன். யாழில் வாள்வெட்டு, ரவுடித்தனம், கொள்ளை,களவு, போதைப்பொருள் என்பவற்றை முழுமையாக கட்டுப்படுத்தப்படும் வரை ஓயமாட்டேன் என நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.


போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் உதவ வேண்டும் (நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை) Reviewed by Author on May 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.