அண்மைய செய்திகள்

recent
-

நீச்சல் குளத்திற்குள் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்!


அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த குழந்தை தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக நீச்சலடிக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக்கில் வெளியாகியுள்ளஅந்த வீடியோவில், மஞ்சள் நிற ஆடை அணிந்து நீச்சல் குள்ளத்தின் கட்டில் உட்கார்ந்திருக்கும் அக்குழந்தையிடம் நீச்சல் குளத்திற்குள் இருக்கும் பெண்மணி, காலணியை காட்டுகிறார். அதனை தனது பிஞ்சு கையால் எடுக்க முற்படுகையில் அதனால் முடியவில்லை.

அதன் பின்னர் சற்று முன்னால் நகர்ந்து வரும் அக்குழந்தை, நீச்சல் குளத்தில் தலைகுப்புற கவிழ்கிறது.


ஆனால் விழுந்த சில நொடியில் தனது காலினை திருப்பி கொண்டு கைகள் இரண்டையும் அசைத்தவாறு நேராக மிதக்க ஆரம்பிக்கிறது.

இடை இடையில் தனது இரண்டு கைகளையும அசைத்தவாறு நீச்சல் அடிக்கிறது, மிகவும் தைரியத்துடன் நீந்திக்கொண்டிருக்கும்அக்குழந்தையை ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு அவரது தாய் தூக்கி விடுகிறார்.

இந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, இதனைப்பார்த்த சமூகதளவாசிகள், இக்குழந்தைக்கு இதற்கு முன்னர் நீச்சல் குளத்தில் குளித்த அனுபவம் இருந்திருக்கவேண்டும் என்றும் சிலர், இது மிகவும் ஆபத்தானது இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது எனவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நீச்சல் குளத்திற்குள் தலைக்குப்புற விழுந்த குழந்தையின் தைரியம்! Reviewed by Author on May 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.