குழந்தைக்கு தாய்பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்! காரணம் என்ன?
பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைக்கு தாய் பாலில் விஷம் கலந்து கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Rose Jones, 30 என்ற பெண்மணி சுமார் 6 மாதங்கள் தனது தாய்ப்பாலில் C drug Tramadol என்ற வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் குழந்தையுடன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் பரவியுள்ளது, இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், தனது குழந்தையை ஒரேடியாக கொன்று விடாமல் படிப்படியாக கொல்ல திட்டமிட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இப்பெண்மணி மீது இதற்கு முன்னர் தனது வீட்டில் தனக்குதானே தீவைத்துக்கொண்டார் என்ற குற்றசாட்டும், வேறொரு நபரின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணத்தினை கையாடல் செய்துள்ளார் என்ற குற்றசாட்டும் உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு பிரித்தானியாவின் PlymouthCombined Court - இல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்றும் அப்பெண்ணை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கான தண்டனைமே 19 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைக்கு தாய்பாலில் விஷம் கலந்து கொடுத்த தாய்! காரணம் என்ன?
Reviewed by Author
on
May 08, 2016
Rating:

No comments:
Post a Comment