வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன் அழைப்பு,,,,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிக்க முன்வருமாறு எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாடு தற்போது முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதாயின் அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
அதன் மூலமாக முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
அரசியல் தீர்வு என்பது தமிழர்களுக்கு மட்டும் தேவையான விடயமல்ல.
ஒட்டுமொத்த நாட்டுக்கும் இன்று அரசியல் அமைப்பு மாற்றம் ஒன்று தேவைப்பட்டுள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன் அழைப்பு,,,,
Reviewed by Author
on
May 09, 2016
Rating:

No comments:
Post a Comment