கிளிநொச்சியில் பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு,,,
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி தொழில்களில் கவனம் செலுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக மாவட்ட கல்வியியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவங்கள் பெரும்பான்மையாக கிளிநொச்சி மலையாளபுரம் சாந்தபுரம் பரந்தன் திருவையாறு பூநகரி பகுதிகளிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இங்கு ஒரேயொரு கல்வி வலயம் மட்டுமே உள்ளது. இங்கே 112 பாடசாலைகள் உள்ளன.
இவற்றில் தற்போது 104 பாடசாலைகளே இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான கிராமத்து பாடசாலைகளில் உரிய வசதிகள் இல்லாமையின் காரணமாக மாணவர்கள் தற்போது நபர்புற பாடசாலைகளை நாடி வருகின்றர்.
இதன் காரணமாக விரைவில் இன்னும் சில பாடசாலைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட கல்வியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் பாடசாலை செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு,,,
Reviewed by Author
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment