மீன்களின் விலை அதிகரிப்பு
மீன்களின் விலை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அன்றாடம் பிடிக்கப்படும் மீன்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என்று பேலியகொட மீன் சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரம ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட அடை மழையின் காரணமாக மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லை என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் இன்றே மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீன்களின் விலை அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 26, 2016
Rating:

No comments:
Post a Comment