வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?
வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும்.
இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது.
இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றியமைக்கலாம்.
அந்தக் குறியீடுகள் இதோ:
• தடிப்பெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும். ( *what* என்று எழுதினால் what என்று தடிப்பாகத் தோன்றும்.)
• சாய்வெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும். ( _how_ என்று எழுதினால் how என்று சாய்வாகத் தோன்றும்.)
• நடுக்கோடு அல்லது குறுக்குகோடு : சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். ( ~sorry~please என்று எழுதினால், ‘sorry’ எனும் சொல் நீக்கப்பட்டு please என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : sorryplease
வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?
Reviewed by NEWMANNAR
on
May 17, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 17, 2016
Rating:


No comments:
Post a Comment