முசலி-கொக்குபடையான் குடிநீர் வினியோகத்திட்டத்தின் அவல நிலை-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குபடையான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோக திட்டம் கடந்த பல வருட காலமாக பராமரிப்பு அற்ற நிலையிலும்இ இயங்காத நிலையிலும் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்சவின் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக கொக்குபடையான்இசிலாவத்துறை மற்றும் அகத்தி முறிப்பு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் குடி நீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் நோக்குடன் மூன்று குடி நீர் வினியோக திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதில் சிலாவத்துறை,அகத்தி முறிப்பு குடிநீர் திட்டம் ஒரு நாளில் சில மணி நேரம் இயங்குவதாகவும் கொக்குபடையான் நீர் திட்டம் இது வரை இயங்கவில்லை என்றும் பல இலச்சம் ரூபாய் நிதி செலவு செய்து உருவாக்கப்பட்ட திட்டம் அழிந்து போவதாகவும்,இவ்விடையத்தில் முசலி பிரதேச சபை கவனம் செலுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே முசலி பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினை பாரிய பிரச்சினையாக இருந்து வருவதாகவும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை.
முசலி-கொக்குபடையான் குடிநீர் வினியோகத்திட்டத்தின் அவல நிலை-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
May 14, 2016
Rating:

No comments:
Post a Comment