அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் நிரந்தரமாக மூடப்படவுள்ளது….

மன்னார் மாவட்டத்தில் மூடிய நிலையில் உள்ள மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் நிரந்தரமாக 30-06-2016 மாதம் மூடப்படவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகமானது 20-07-2014 மன்னார் பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் உள்ள தனியார் வீடு ஒன்றில் மிகவும் சிறப்பான முறையில் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது. பெரும்பாலான நேரங்களில் இவ்அலுவலகம் மூடிய நிலையிலே காணப்படுகின்றது. காரணம் ஆளணிப்பற்றாக்குறையும் வழிநடத்தல் பாதுகாப்பு காரணங்களை காட்டி மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் வவுனியா அலுவலகத்தில் இருந்தே பணியாற்றுகின்றனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மக்கள் முறைப்படும் பிரதான விடையங்களாக…..

    சிறுவர் துஷ்பிரயோகம்
    பெண்கள் கொடுமைகள் பாலியல் தொந்தரவுகள்
    வன்முறைச்சம்பவங்கள்
    காணமல் போனோர் தொடர்பாடல்
    அநாவசிய கைதுகள்
    மிரட்டல் தஞ்சம் புகுதல்
    வீட்டுத்திட்ட பிரச்சினைகள் (300 மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு)
தற்போது வீட்டுத்திட்ட பிரச்சினைகளை பதிகின்றது...


இன்னும் சொல்ல முடியாத பலவிடையங்களை தெரியப்படுத்துவதற்கும் முறைப்பாடு செய்வதற்கும் மக்கள் நம்பிக்கையோடு செல்லும் இடம் தான் மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த ஆனைக்குழுவே சரிவர இயங்காமல் இருப்பதோடு இன்னும் ஒரு மாதத்தில் மூடப்படவுள்ள செயலானது மக்களை பாதளக்குழியில் தள்ளிவிடும் செயலுக்கு ஒப்பாகும்.

யுத்தகாலங்களில் திறம்பட இயங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு யுத்தமுடிவுக்கு பின் சரியான சேவையை ஆற்றவில்லை காரணம் வன்முறைகள் யுத்தகாலத்தில் தான் இருந்தது தற்போது இல்லை என்று நினைக்கின்றார்கள் போலும் யுத்த காலத்தினை விட தற்போதைய சு10ழலில் தான் வன்முறைகள் பாலியல் பிரச்சினைகள் கைதுநடவடிக்கைகள் ஏராளமாய் எங்கும் தடையின்றி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் ஏராளமான பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றார்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் இன்னும் பதற்ற நிலையே காணப்படுகின்றது. அதற்கு உதாரணமாக பல விடையங்கள் இருந்தாலும் அண்மையில் நடைபெற்ற இரண்டு பெணகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினையினையும் கைது நடவடிக்கையினையும்  நினைவுறுத்துகிறோம்.

நிதிப்பங்களிப்பினை செய்கின்ற UN நிதியமானது தொடர்ந்தும் நிதிப்பங்களிப்பினை வழங்கி மன்னார் மாவட்டத்தில் நிரந்தரமான மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தினை அமைப்பதோடு மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கின்ற நம்பிக்கைக்குரிய ஆணைக்குழுவாக இயங்க வேண்டும் என்பது மன்னார் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களை இணைக்கும் முகமாக கனகராயன் குளத்தில் அலுவலகம் அமைப்பதோடும் வவுனியா மன்னார் மக்களை இணைக்கும் விதமாக புத்தளத்திலும் அலுவலகம் அமைத்தாலும் “நோய்க்குத்தான் மருந்து தேவை மருத்துவரும் தேவை”
மன்னார் மக்களின் போக்குவரத்து சூழல்பிரச்சினைகளையும் நலனையும் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் உப அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக திறந்து செயலாற்றினால் மன்னார் மக்களாகிய எம் துன்பதுயரங்கள் பிரச்சினைகள் தீரும் அதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மிகவிரைவில் நல்லதொரு தீர்வைப்பெற்றுத்தர வேண்டும் என எதிர்பார்த்திருக்கிறேம்.

-மன்னார் விழி-



மன்னாரில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் நிரந்தரமாக மூடப்படவுள்ளது…. Reviewed by Author on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.