அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுவைத்திய சாலையில் பலியான ரோகினி தமிழரசன் மாரடைப்பினால் இறக்கவில்லை- மாத்தளை JMO வைத்திய கலாநிதி வைத்திய ரத்திண மருத்துவ அறிக்கை.....

மன்னார் பொதுவைத்திய சாலையில் 17-05-2016 அன்று செவ்வாய்க்கிழமை சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரோகினி தமிழரசன் வயது 39 இரண்டு பிள்ளைகளின்தாய் மர்மமானமுறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் கொண்ட உறவினர்களும் சக ஊழியர்களும் இறந்தவரது உடலை வாங்க மறுத்ததோடு தங்களுக்கு உண்மையானதும் தெளிவான தீர்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க மன்னார் நீதவான் மருத்துவ அறிக்கையை பரிசீலனை செய்து மேலதிக விசாரனைக்காக மாத்தளை பொதுவைத்திய சாலைக்கு இரண்டு பொலிஸ்அதிகாரிகள் உட்பட இறந்தவரின் கணவர் தமிழரசன் மைத்துனர் சந்திரக்குமார் மற்றும் உறவினர் செல்வக்குமார் மற்றும்  ராமச்சந்திரன் ஆகியோருடன் அனுப்பிவைக்கப்பட்டார்.

மாத்தளை பொது வைத்தியசாலையில் மன்னாரில் இருந்து அனுப்பிய மருத்துவ அறிக்கையுடன் நீதவான் அறிக்கையும் பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட மாத்தளை பொதுவைத்தியசாலையின் JMO வைத்திய கலாநிதி D.L.வைத்திய ரத்திண இவர் இலங்கையின் பிரதித்திபெற்ற நிபுணர்களில் பிரதானமானவர்  உடலை பரிசோதித்து விட்டு சொன்ன வார்த்தை இதுதான் எனது கண்ணுக்கு எட்டிய வரையில் எந்த உறுப்பிலும் பாதிப்பும் இல்லை பிரச்சினையும் இல்லை இவர் மாரடைப்பால் இறக்கவில்லை..... மன்னார் மருத்துவ அறிக்கையின் படி மாரடைப்பால் இறந்துள்ளார் என்று தான் எழுதப்பட்டுள்ளது.

மாத்தளை பொது வைத்தியசாலையின் JMO.வைத்திய கலாநிதி D.L. வைத்திய ரத்திண இவர் மேலதிக பரிசோதனைக்கும் பகுப்பாய்வுக்கும் உடலில் இருந்து இதயம்-சுவாசப்பை-நாளம்-நுரையீரல் நான்கு உறுப்புக்களில் இருந்து சிறுபகுதிகளை பகுப்பாய்வுக்காக கொழும்பு பொதுவைத்திய சாலைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
உடலை கணவர் மற்றும் உறவினரிடன் கைளித்துள்ளனர், நேர்மையான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மன்னார் திரும்பியுள்ளனர், இன்று அதிகாலை 04மணியளவில் மன்னார் பொதுவைத்திய சாலையை வந்தடைந்த ரோகினி அவர்களின் உடல் அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு அவரது உடல் தலைமன்னார் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். பிறப்பதும் இறப்பதும் வளமைதான் ஆனாலும் இப்படி அநியாயமாக உயிரோடு விளையாடுவது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல..... இதுவரை எத்தனையோ உயிர்களுக்கு மாரடைப்பை காரணம் காட்டி வந்த வைத்தியசாலை நிர்வாகம் மருத்துவர்கள் தற்போது முதல் கட்ட பரசோதனையிலேயே தெரியவந்துள்ளது மாரடைப்பினால் இறப்பு ஏற்படவில்லை என்று அப்படியானால் எப்படி இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது அப்ப இங்கு இருக்கும் வைத்தியர்கள்……??????

இப்படித்தானே எத்தனை உயிர்களுக்கு மருத்துவ அறிக்கையில் மாரடைப்பு என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் அது அத்தனையும் உண்மையிலும் உண்மைதான்......ஒருசிலரைத்தவிர எல்லோராலும் உங்களது மருத்துவ அறிக்கையை வாசிக்கமுடியாது.  அதுபோல இறந்த ரோகினி என்பவர் மருத்துவ ஊழியர் என்பதால் தான் மாத்தளை மட்டும் பரிதோதனைக்கு சென்றுள்ளது… அப்படி இருந்தம் நீதியான தீர்ப்பு கிடைக்குமா…!!!????
இல்லையானால் மீண்டும் பழைய கதைதானா.............???

முதல் கட்ட தீர்ப்பு கையில் உள்ள போது மேலதிக பகுப்பாய்வு என்பதே…அதுவும் ஒரு மாத இடைவெளி…. விளங்கவில்லையா .....ஆறின கஞ்சி பழங் கஞ்சியே........

தவறு செய்யும் மருத்துவர்கள் மீதும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் மீதும் என்ன சட்டநடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் இதற்கான நிரந்தரத்தீர்வு எப்போது கிடைக்கும்….????  எத்தனை உயிர்ப்பலிக்காக……

மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் ராஜினி சிசில் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை அத்தியட்சகர் ஈற்றன் பீரிஸ்....... வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே......... ,வடமாகாண உறுப்பினர்களே அமைச்சர்களே ,  வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் , அவர்களே..........
என்ன நடடிக்கை எடுக்க போறீர்கள்.......


-மன்னார்விழி-
 








தொடர்புடைய செய்தி

கொலைக்களமாக மாறியுள்ள மன்னார் பொது வைத்திசாலை ----மீண்டும் ஒரு உயிர் பலி-Photos@video

25-04-2016 அன்று மன்னார் பொதுவைத்திய சாலையின் கடமைபுரியும் சில வைத்தியர்களின் அசமந்தப்போக்கும் கவனயீனமும்….நடந்தது என்ன?.. முழுமையான தகவல் 

http://www.newmannar.com/2016/05/Mannar_20.html

மன்னார் பொதுவைத்திய சாலையில் பலியான ரோகினி தமிழரசன் மாரடைப்பினால் இறக்கவில்லை- மாத்தளை JMO வைத்திய கலாநிதி வைத்திய ரத்திண மருத்துவ அறிக்கை..... Reviewed by Author on May 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.