லொறி மோதியதை போல் உணர்ந்தேன்: பெய்லின் திக் திக் நிமிடங்கள்
விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ்- புனே அணிகள் மோதிய போட்டி நடந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
இதனையடுத்து 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் புனே அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டினாலும் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி புனே அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது புனே அணியின் ஜார்ஜ் பெய்லி, அவுஸ்திரேலிய வீரரான நாதன் கோல்ட்டரின் பந்தை அடிக்க முயன்றார்.
வேகமாக வந்த பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டை தாக்கியதில், ஹெல்மெட் ஸ்டம்புக்கு அருகே விழுந்தது.
எனினும் அதிர்ஷ்டவசமாக பெய்லிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து பெய்லி, பவுன்சர் பந்து தாக்கிய போது நிலை குலைந்து விட்டதாகவும், லொறி வந்து முகத்திய தாக்கியது போன்று உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் டிவி ரீபிளேயில் பார்த்த போது தான் எந்த அளவு தாக்கியது என்பதை தெளிவாக உணர முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
லொறி மோதியதை போல் உணர்ந்தேன்: பெய்லின் திக் திக் நிமிடங்கள்
Reviewed by Author
on
May 18, 2016
Rating:

No comments:
Post a Comment