அண்மைய செய்திகள்

recent
-

ஆமை வேகத்தில் இடம் பெற்று வரும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்-மக்கள் விசனம்.(படம்)

மன்னாரில் இடம் பெற்று வருகின்ற நகர அபிவிருத்தி பணிகள் ஆமை வேகத்தில் இடம் பெற்று வருவதாகவும்,இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலை வரை பாரிய மூன்று கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டு வருகின்ற போதும்,குறித்த வேளைத்திட்டங்கள் பல மாதங்களாக மந்த கதியில் இடம் பெற்று வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியோடு,யுனொப்ஸ்(UNOPS)அமைப்பின் நிதி உதயுடன்,குறித்த அமைப்பினால் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள பாரிய கல் வெட்டுக்கள் அமைக்கும் பணி தற்போது இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பொலிஸ் நிலையம் முன்பாகவும்,டெலிகம் சந்தி மற்றும் வைத்தியசாலை பிரதான வீதி ஆகிய மூன்று இடங்களில் குறித்த கல்வெட்டுக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த கல்வெட்டுக்கள் அனைத்தும் அமைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் குறித்த வேளைத்திட்டங்கள் பல மாதங்களாக இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

மேலும் குறித்த வேளைத்திட்டங்கள் தரமற்றதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்களும் பாதீப்படைந்துள்ளதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குறித்த வீதி முழுமையாக சேதடைந்துள்ளது.எனினும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

-மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலாக குறித்த வீதி மிக முக்கிய பிரதான வீதியாக காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை அம்புலான்ஸ் வண்டி மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு குறித்த வீதியே பயண்படுத்தப்பட்டு வருகின்றது.

-எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடையத்தில் அக்கரை செலுத்தி அரை குறையாக காணப்படுகின்ற குறித்த 3 கல்வெட்டுக்களை பூரணப்படுத்தி,குறித்த வீதியை உரிய முறையில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




நமது மன்னார் நிருபர்-

(21-05-2016)








ஆமை வேகத்தில் இடம் பெற்று வரும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்-மக்கள் விசனம்.(படம்) Reviewed by NEWMANNAR on May 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.