அமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.!
அமெரிக்காவில் நபரொருவருக்கு தானமாக பெற்ற ஆணுறுப்பைப் பயன்படுத்தி ஆணுறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்தியசாலை என்ற சாதனையை போஸ்டன் நகரிலுள்ள மஸாசுஸெட்ஸ் பொது வைத்தியசாலை படைத்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
இது சத்திர சிகிச்சையிலான ஒரு மைல்கல்லாக அழைக்கப்படுகிறது.
பிறப்புறுப்பிலான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு முன்னர் ஆணுறுப்பு அகற்றப்பட்ட தோமஸ் மானிங் (64 வயது) என்பவருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகில் இத்தகைய சத்திரசிகிச்சைக்கு உட்பட்ட மூன்றாவது நபராக தோமஸ் விளங்குகிறார்.
இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற மேற்படி அறுவைச்சிகிச்சையை சிறுநீரக சிகிச்சைப் பிரிவு, மனநலப்பிரிவு, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைப் பிரிவு மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த 50 மருத்துவர்கள் கூட்டிணைந்து 15 மணித்தியாலங்களைச் செலவிட்டு மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி அறுவைச்சிகிச்சையை தோமஸ{க்கு குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.
குறித்த அறுவைச் சிகிச்சை மூலம் எதிர்வரும் மாதங்களில் தோமஸ{க்கு இயல்பாக சிறுநீரைக் கழிக்கவும் பாலியல் உறவில் ஈடுபடவும் முடியும் என நம்புவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோமஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை 2006 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த நபரொருவருக்கு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த நபர் இந்த சிகிச்சையால் மனப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்குப் பொருத்தப்பட்ட தானமாகப் பெற்ற ஆணுறுப்பு பின்னர் அகற்றப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது ஆணுறுப்பு மாற்று சிகிச்சை கடந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் மூலம் அந்த சிகிச்சை செய்து கொண்டவர் குழந்தையொன்றுக்குத் தந்தையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் முதலாவது ஆணுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை : வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.!
Reviewed by Author
on
May 20, 2016
Rating:

No comments:
Post a Comment