அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை கடும் தொணியில் எச்சரித்த மன்னார் நீதவான்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கிராமத்தில் சட்ட விரோதமான முறையில் 'பனங்கல்லு' விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா கடும் தொணியில் எச்சரித்த சம்பவம் ஒன்று இன்று(13) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை கிராமத்தில் சட்ட விரோதமான முறையில் பனங்கல்லு விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 5 சந்தேக நபர்கள் கைது செய்த மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை இன்று(13) வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

-இதன் போது மன்னார் மது வரித்திணைக்கள அலுவலகர் ஒருவரும் மன்றில் பிரசன்னமாகி இருந்தார்.இதன் போது குறித்த 5 சந்தேக நபர்களும் சட்டவிரோதமான முறையில் இலுப்பைக்கடவை பகுதியில் பனங்கல்லு விற்பனை செய்தார்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது மன்றில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் குறித்த வழக்கானது மன்னார் மது வரித்திணைக்களத்தினால் மாதம் மாதம் 'கோட்டா' அடிப்படையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும்,தமது சங்கத்தினால் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு வழக்கு நடவடிக்கைக்காக மன்னார் மது வரித்திணைக்களத்திற்கு அனுப்பப்படுகின்றது என குறித்த நபர் மன்றில் தெரிவித்தார்.

இதனையடுத்து மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த 5 சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தை திறந்த மன்றில் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் அப்பாவி சீவல் தொழிலாளர்களை ஏன் இவ்வாறு மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள் நடத்துகின்றார்கள் என்றும் குறித்த மதுவரித்திணைக்கள அதிகாரிகளை
எச்சரித்ததோடு,குறித்த சந்தேக நபர்களிடம் திறந்த நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் மன்னார் மது வரித்திணைக்கள்ததில் குறித்த அலுவலகருக்கும்,தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் உத்தியோகஸ்தர்கள் குழுவினர்களுக்கும் எதிராக எவ்விதமான சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தனக்கு அறிவுறைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் குறித்த வழக்குச்சீட்டுக்களை அனுப்புமாறு கூறியதோடு,மன்றில் ஆஜராகியிருந்த மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை கடும் தொணியில் நீதவான் எச்சரித்தார்.
மேலும் குறித்த 5 சந்தேக நபர்களையும் தலா ஆயிரம்(1000-00) ரூபாய் பெறுமதியான செந்தப்பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

குறித்த வழக்கு விசாரனை மீண்டும் எதிர்வரும் யூலை மாதம் 27 ஆம் திகதி விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மதுவரித்திணைக்கள அலுவலகரை கடும் தொணியில் எச்சரித்த மன்னார் நீதவான். Reviewed by NEWMANNAR on May 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.