கிளிநொச்சியில் உழவு இயந்திரம் கிணற்றில் வீழ்ந்தது
கிளிநொச்சி- மலையாளபுரம் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியது. நேற்று பிற்பகல் கிணற்றினை சுற்றி உழவு செய்து கொண்டிருந்த சமயம், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கிணற்றினுள் விழுந்தது. இதன்போது சாரதி சிறு காயங்களிற்கு உள்ளான நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டார். சுமார் 35 அடி ஆழமான கிணற்றில் நீர் அதிகமாக காணப்பட்டதனால், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கிணற்றில் இருந்த நீர் அகற்றப்பட்டதன் பின்னர் உழவு இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உழவு இயந்திரம் கிணற்றில் வீழ்ந்தது
Reviewed by NEWMANNAR
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment