வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மன்-எருக்கலம்பிட்டி முஸ்ஸீம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்-Photos
மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட்; குரே திடீர் வஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(23) திங்கட்கிழமை மதியம் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இன்று திங்கட்கிழமை மதியம் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோலட்; குரே அவர்களை பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.
இதன் போது வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் ஹபீபு முஹமது ரயீஸ்,மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செஸ்தியான்,மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸும் மத்திய மகா வித்தியாலய பாடசாலை இது வரை எவ்வித அபிவிருத்தியும் காணாத நிலையில் குறித்த பாடசாலையினை அபிவிருத்தி செய்வது குறித்தும்,பாடசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக குறித்த பாடசாலை கடந்த காலங்களில் மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாடசாலையாக காணப்பட்டது.
எனினும் கடந்த போர்க்காலத்தின் பின் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் குறைவடைந்த நிலையில் தற்போது எவ்வித அபிவிருத்திகளும் அற்ற நிலையில் குறித்த பாடசாலை இயங்கி வருகின்றமை தொடர்பில் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மன்-எருக்கலம்பிட்டி முஸ்ஸீம் மத்திய மகா
வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம்-Photos
Reviewed by Admin
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment