-மன்னார் ஆண்டாங்குளம் சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி-மூவர் காயம்.(Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் சந்தியில் இன்று(23) திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டக்கண்டல் கிராமத்தில் இருந்து ஆண்டாங்குளம் சந்தியூடாக  வற்றாப்பலை ஆலயத் திருவிழாவிற்கு சென்ற ஹயஸ் வாகனத்துடன்,அதி வேகமாக செலுத்தி வரப்பட்ட மோட்டார் சைக்கில் மேதியதிலே குறித்த விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதன் போது மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் உடனடியாக அம்புலான்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு குறித்த இருவரும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் அடம்பன் வைத்தியசாலையிலும்,மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-இந்த நிலையில் மோட்டார் சைக்கிலில் பயணித்து விபத்திற்கு உள்ளான இருவரும்,மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்தவர்,மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மன்னார் ஆண்டாங்குளம் சந்தியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் பலி-மூவர் காயம்.(Photos
 Reviewed by Admin
        on 
        
May 23, 2016
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
May 23, 2016
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
May 23, 2016
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
May 23, 2016
 
        Rating: 







 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment