அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வைத்தியசாலையில் விசேட கூட்டம் -நிலவும் குறைபாடுகள் குறித்தும் வைத்தியசாலை ஊழியர் றோகினி உயிரிழந்த விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது - விரைவில் அபிவிருத்தி குழு ..

ஊடகங்களின் செய்திக்கு பலன் 

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (23-05-2016 அன்று  மன்னார் வைத்தியசாலை மாநாட்டு மண்டபத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சுகாதார அமைச்சர்,மறைமாவட்ட குரு முதல்வர்,பிராந்திய சு.சே.பணிப்பாளர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள், நிர்வாக ரீதியான விடயங்கள் என்பன ஆராயப்பட்டதுடன் அடுத்த வாரம் வைத்தியசாலை அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டு,செயற்படும் என அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் தலை மன்னார் வைத்தியசாலை ஊழியர் றோகினி மன்னாரில் சத்திர சிகிச்சையின் போது உயிரிழந்த விடயம் சம்பந்தமாகவும் இக் கூட்டத்தில் விசேடமாக ஆராயப்பட்டதுடன்,சட்ட வைத்திய அதிகாரி,மற்றும் நீதிமன்ற அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் இதுவிடயமாக தீர்மானிக்கலாம் எனவும் அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது


மேலும் தலைமன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் றோகினி என்ற 2 பிள்ளைகளின் தாய் வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவில் திடீர் மரணமடைந்தார்.

குறித்த செய்தியை ஊடகங்கள் பிழையான முறையில் பிரசுரித்துள்ளதாகவும், குறிப்பாக ஊடகங்கள் மன்னார் பொது வைத்திய சாலை குறித்து தவறான செய்திகளை வெளியிடுவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகள் மீது குற்றம் சாட்டினார் .

தொடர்புடைய செய்திகள் 

தலைமன்னார் றோகினியின் மரணம் சொல்லும் உண்மை?

புதைக்கப்பட்டது இரண்டு பிள்ளையின் தாயனா ரோகினியை மட்டுமல்ல நீண்டகாலமாக கேட்கும்உயிர்பாதுகாப்பு நீதியை....... முழுமையான படங்களுடன்


மன்னார் பொதுவைத்திய சாலையில் பலியான ரோகினி தமிழரசன் மாரடைப்பினால் இறக்கவில்லை- மாத்தளை JMO வைத்திய கலாநிதி வைத்திய ரத்திண மருத்துவ அறிக்கை.....


கொலைக்களமாக மாறியுள்ள மன்னார் பொது வைத்திசாலை ----மீண்டும் ஒரு உயிர் பலி-Photos

மன்னார் பொதுவைத்திய சாலையின் கடமைபுரியும் சில வைத்தியர்களின் அசமந்தப்போக்கும் கவனயீனமும்….நடந்தது என்ன?.. முழுமையான தகவல் 








மன்னார் வைத்தியசாலையில் விசேட கூட்டம் -நிலவும் குறைபாடுகள் குறித்தும் வைத்தியசாலை ஊழியர் றோகினி உயிரிழந்த விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது - விரைவில் அபிவிருத்தி குழு .. Reviewed by NEWMANNAR on May 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.