மன்னார் நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்புவிழா நிகழ்வு 11.06.2016 (மன்னார் கொம்போஸ்ட்)முழுமையான படங்கள் இணைப்பு
தூய்மையாகும் மன்னார் வழமான வாழ்விற்கு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்பு......
மன்னார் நகரசபையால் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திண்மக்கழிவு நிலையமானது 11.06.2016 அன்று மாலை 4 மணியளவில் மன்னார் நகரசபை செயலாளர் திரு.X.L.றெனாலட் பிறிற்றோ அவர்களின் தலைமையில் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா. டெனிஸ்வரன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் முன்னாள் நகரசபை உபதலைவர் உறுப்பினர்கள் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் பிரதிநிதிகள் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் மேலும் இந்நிகழ்வில் மாதர் கி.அ.சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதி நிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் நிலையம் தொடர்பாக நகரசபை செயலாளர் தெரிவிக்கையில் மத்திய உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்பட்ட 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் பலரது உதவியின் காரணமாக சிறப்பான முறையில் உள்ளூரில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான காய்கறி உற்பத்திக்கு பயனுள்ளதாக அமையும். வீடுகளில் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளவோ எம்மால் குறைந்த விலையில் இதனை கொள்வனவு செய்து ஆரோக்கியமான காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்ளமுடியும்.
மேலும் தோட்ட பயிர் செய்கையாளர்கள் மொத்தமாக இவ் இயற்கை பசளையினை எமது திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
மேலும் பிளாஸ்ரிக் பொலித்தீன் போன்ற கழிவுப்பொருட்களைப் பொடியாக்கும் இயந்திரங்களும் குறித்த நிலையத்தில் காணப்படுவதாகவும் இவ் இயந்திரங்கள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்ரிக் பொலித்தீன்கள் போன்றவை பொடியாக்கி மீள் சுழற்சிக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எனவும் கூறினார். குறித்த நிலையத்திற்கு பொலித்தீன் இயந்திரம் கொள்வனவு செய்ய உதவி புரிந்த வடமாகாண பிரதம செயலாளர் ää பிளாஸ்ரிக் இயந்திரத்தை வழங்கி உதவிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மன்னார். இலைகுழைகளைப் பொடியாக்கும்
WOOD CHIPPER இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கி உதவிய உலகதரிசனம் நிறுவனம் மன்னார் இயற்கைப்பசளையை அரிக்கும்
HALLER இயந்திரத்தை வழங்கிய மத்திய திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றிற்கும் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டார்.
மேலும் மன்னார் நகரப்பகுதி மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் படியும் இதன் மூலம் நகர்ப் புறத்தை தூய்மையான பிரதேசமாக உருவாக்க முடியும் என்றும் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. குறித்த இயற்கைப் பசளைக்கு மன்னார் கொம்போஸ் என பெயர் சூட்டப்பட்டது. சிறப்பம்சமாகும்.
மன்னார் நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் திறப்புவிழா நிகழ்வு 11.06.2016 (மன்னார் கொம்போஸ்ட்)முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment