கடலுக்குள் செல்லும்போது அவதானம் தேவை
எதிர்வரும் சில நாட்களுக்கு தெற்கு பகுதி கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விசேடமாக 15 - 16ஆம் திகதிகளில் இந்த நிலை அதிகமாக காணபடும் எனவும் அன்றைய நாட்களில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோர் இது தொடர்பில் கண்காணிப்புடன் செயற்படுவது அவசியம் என அந்த நிலையம் கூறியுள்ளது.
மேல், தெற்கு, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சிலவேளைகளில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் மன்னார் மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் குறைந்தளவு மழை பெய்யும் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது. ஊவா மற்றும் கிழக்கில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடலுக்குள் செல்லும்போது அவதானம் தேவை
Reviewed by NEWMANNAR
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment