14வது அனைத்துலக தமிழ் ஆய்வு மாநாட்டின் போது தமிழ் நேசன் அடிகளாருக்கு சிறப்பு விருது.....
14வது அனைத்துலகத் தமிழ் உரைநடை ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க நாள் விழா கடந்த மே மாதம் 22ஆம் திகதி வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின்போது மன்னார் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனரும் ‘மன்னா’ என்ற மாதாந்த கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியரும் மன்னார் தமிழ்ச் சங்க நிறுவுனருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளாருக்கு அவரின் மேலான தமிழ்ப் பணிகளைப் பாராட்டி ‘தமிழ் முகில்’ என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சன்முகலிங்கன் அவர்கள் தமிழ் நேசன் அடிகளாருக்கு பொன்னாடை போர்த்தி இந்தச் சிறப்பு விருதை வழங்கிக் கௌரவித்தார். இந்தியாவில் இருந்து 38 தமிழ் அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்கள் இம்மாநாட்டின் ஆதாரசுருதி உரையை வழங்கினார். சப்ரகமுகப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைப் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கினார். இம்மாநாட்டு நிகழ்வின்போது இசை அரங்கம் தொடக்கவிழா அரங்கம் நூல் வெளியீட்டு அரங்கம் விவாத அரங்கம் கருத்தரங்கம்ää காட்சிவழிக் கருத்தரங்கம் பாராட்டு அரங்கம்ää நாட்டிய அரங்கம் என பல்வேறு அரங்கங்கள் இடம்பெற்றன.

14வது அனைத்துலக தமிழ் ஆய்வு மாநாட்டின் போது தமிழ் நேசன் அடிகளாருக்கு சிறப்பு விருது.....
Reviewed by Author
on
June 02, 2016
Rating:

No comments:
Post a Comment