ரூ.17 கோடி நன்கொடையை ஏற்க மறுத்த போப் ஆண்டவர்: காரணம் என்ன?
அர்ஜெண்டினா நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அளித்த ரூ.17 கோடி நன்கொடையை போப் ஆண்டவர் நிராகரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போப் ஆண்டவரின் தாய்நாடான அர்ஜெண்டினாவில் தற்போது புதிய அரசு அமைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, பொதுமக்களின் சேவைப்பணிக்காக அர்ஜெண்டினா அரசு போப் பிரான்சிஸ் அறக்கட்டளைக்கு 16,666,000 பெசோ(17,39,94,000 கோடி இலங்கை ரூபாய்) நன்கொடை அளித்துள்ளது.
ஆனால், இந்த நன்கொடை தொகையை போப் பிரான்சிஸ் உடனடியாக ஏற்க மறுத்துள்ளார்.
அர்ஜெண்டினா அரசு அளித்த 16,666,000 பெசோ நன்கொடையை போப் பிரான்சிஸ் ஏற்க மறுத்ததற்கு அந்த தொகையில் உள்ள ‘666’ என்ற எண்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.
கிறித்துவர்களின் புனித நூலான பைபிளில் உள்ள 13 அதிகாரத்தில் இந்த எண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், ’666’ என்பது சாத்தானை குறிக்கும். சாத்தானின் பின் தலையில் ‘666’ என்ற எண்கள் எழுதப்பட்டிருக்கும்.
எனவே, அர்ஜெண்டினா அரசு அளித்த நன்கொடை தொகையில் இந்த எண்கள் இருந்ததால் தான் போப் பிரான்சிஸ் அந்த தொகையை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில் ‘I don’t like the 666’ என போப் பிரான்சிஸ் கூறியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், வேறு சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புதிதாக அமைந்துள்ள அர்ஜெண்டினா அரசிற்கு பொதுப்பணிகள் ஏராளமாக உள்ள நிலையில், அந்த அரசிடமிருந்து நன்கொடையை பெற போப் பிரான்சிஸ் விரும்பவில்லை’ எனவும் செய்தி வெளியிட்டுள்ளன.
ரூ.17 கோடி நன்கொடையை ஏற்க மறுத்த போப் ஆண்டவர்: காரணம் என்ன?
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment